;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.05.2018)

0

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்தடுப்புடுள்ளனர்

முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தம்

இலங்கையிலுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

அதனடிப்படையில், சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

இதற்காக செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

இதில் இலங்கை சார்பில் வௌிவவகார அமைச்சு கைச்சாத்திட உள்ளது.

மழையுடனான காலநிலை நீடிக்கும் – யாழிலும் மழை பெய்யலாம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 முதல் 150 மி.மீற்றருக்கு இடையிலான அளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இதுதவிர யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு திசையில் காணப்படுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரலாம் என்று அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது

இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஜூன் மாதம் 08ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று (23) பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிபதி முர்து பெர்ணான்டோ இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத காரணத்தால் மனுவை பிற்போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியப் பொலிஸார் முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அமைச்சரவையின் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருந்ததாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக இரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதாகவும், இதனூடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனக்கு எதிரான விசாரணை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறும் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில பிரதேசங்களில் மின்சாரம் தடை

சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, போலவத்தை, பன்னல, புத்தளம், சிலாபம் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம் தடைப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் என்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 19 =

*