;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (23.05.2018)

0

தென் மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை தற்காலிகமா மூட தீர்மானம்

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை மூடப்படும் என, தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பிரிவு வகுப்புகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கிறது; மக்கள் அவதானம்

நாட்டில் நிலவுகின்ற தொடர் மழை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

தென் மாகாணத்தில் 28ம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு

தென் மாகாணத்தில் உள்ள சில ஆரம்ப பிரிவு பாடசாலைகள் எதிர்வரும் 28ம் திகதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர கூறியுள்ளார்.

அதன்படி மாத்தறை, முலடியான, தெனியாய, உடுகம, அகுரெஸ்ஸ, தங்காளை, வலஸ்முல்ல மற்றும் காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் ஆகிய இவ்வாறு மூடப்பட உள்ளன.

தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பிரிவு பாடசாலைகளே எதிர்வரும் 28ம் திகதி வரை மூடப்பட உள்ளன.

சீரற்ற காலநிலை – 105,352 பேர் பாதிப்பு – 11 பேர் பலி

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களை சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் சற்று அதிகரிக்ககூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டன – புதிய தினங்கள் விரைவில்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பிற்போடப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*