;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய் பதித் துணுக்குகள்”குதி-1..!! (24.05.2018)

0

தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் தப்போவ நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தப்போவ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ள

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (23) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்கள் அவதானத்தில்

நாட்டில் நிலவுகின்ற தொடர் மழை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

பதவியை இராஜினாம செய்த பாராளுமன்ற உறுப்பினர் நவவி ​

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எச்.எம் நவவி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + seventeen =

*