;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.05.2018)

0

கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் மூடப்படும்

கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பாலத்தினை திருத்தி அமைக்கும் வேலைகளுக்காகவே இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (24) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரை மிக விரைவில் அந்த பதவியில் இருந்து நீக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்டர்போல் பொலிஸாரின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள், இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்தள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

’நீர் மட்டம் குறைந்தது’

நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையின் காரணமாக, கடந்த சில தினங்களாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது இதன் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடுவலை உள்மாற்றீடு சுற்று திறக்கப்பட்டது

வௌ்ளம் காரணமாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான, கடுவலை உள்மாற்றீடு சுற்று, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருந்ததையடுத்து, தற்பொழுது வௌ்ள நீர்மட்டம் குறைவடைந்து வரும் நிலையில், திறக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eight =

*