;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.05.2018)

0

பாராளுமன்றத்தில் இன்று 7 யோசனைகள் மீதான விவாதம்

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘பின்புல ஆயத்தங்களுக்கு இடமளிக்க வேண்டாம்’

நாட்டைத் துண்டாடுவதற்கோ அல்லது ஆயுதங்களை ஏந்தி சிவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கோ அல்லது அவற்றுக்கான பின்புலத்தைத் தயாரிப்பதற்கோ, எவ்வகையிலும் நாட்டுக்குள் இடமளிக்கவேண்டாமென, பாதுகாப்புத் தரப்பினருக்கு, அரசாங்கம் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தது.

அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின்போதே, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சகல பாதுகாப்புப் பிரதானிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் நாட்டைப் பிரிப்பதற்கோ அல்லது ஆயுதங்களைக் கொண்டுவந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபவதற்குகோ ஒருபோதும் இடமளிக்கவேண்டாமென அறிவுறுத்தியுள்ள அவ்விருவரும், எந்நேரமும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வுகளுக்குப் பின்னர், அவ்வாறான எவ்விதமானதொரு முயற்சிகளும் முன்னெடுக்கப்ப டவில்லையென, பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

குற்றவாளியான ஞானசார தேரர் நீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதாகக் கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் உதேஷ் ரணதுங்க இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

இதற்கமைய இன்று (24) தேரரின் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளவும், எதிர்வரும் ஜூன் 14ம் திகதி அவரை அடையாளப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்குவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொடவினை அச்சுறுத்தியதாக ஞானசாரருக்கு எதிராக ஹோமாகம பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

பறிபோகுமா ரணிலின் பதவி?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, புதிய தலைவரை நியமிக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ரணிலை தலைமையிலிருந்து நீக்குவதற்கான புதிய முயற்சியாக திஸ்ஸமஹாராமயவிலிருந்து, ஐ.தே.க. தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்த வரையான எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி.கே.காமினி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் கட்சியின் ஏராளமான ஆதரவாளர்களுடன் எதிர்ப்பு பேரணி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

தென்மாகாண உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஏனைய மாகாண சபைகளின் பெரும்பாலான ஐ.தே.க. உறுப்பினர்களும் இதில் பங்குபற்றுவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*