;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (25.05.2018)

0

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக இந்த 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவும் உடனிருந்தார்.

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ, நவதல்வத்த பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் மண்ணில் புதைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு படுகாயங்களுடன் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இரத்தினபுரி, கலகமதெனிய பிரதேசத்தில் வௌ்ளத்தில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

தொடம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எச்சரிக்கை – சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைப்புகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது ஊழியர்களை அனுப்பி வைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை

கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொலன்னாவயில் இருந்து கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள முதன்மை உப மின் விநியோக கட்டமைப்புக்கு மின் வழங்கும் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இருந்து மின் விநியோகிக்கும் பிரதேசங்களுக்கு மின் தடைப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சு கூறியுள்ளது.

இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

மூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்

மாதம்பே பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

29 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eleven =

*