;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (25.05.2018)

0

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறப்பு

மத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று (25) மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது.

அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.

அந்த நீர்த்தேக்கத்தால் நீர் பெறும் பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க வேண்டி ஏற்படும் என்று அதன் மின்சார உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழ்ஙகப்படும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாதிப்புக்கள் குறைவாகும். கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்திற்கு 80 கோடி ரூபாவும் களுத்துறை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாவும் மாத்தறை மாவட்டத்திற்கு 150 கோடி ரூபாவும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இடர்நிலைமைகள் பற்றி பொதுமக்கள் தொலைபேசிவாயிலாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்க முடியும். இதற்காக அழைக்க வேண்டிய நிலையம். 1902 என்பதாகும்.

தமது வீட்டிற்கோ சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் கிராம உத்தியோகத்தருக்கு பிரதேசத்தைச் சேர்ந்தகள உத்தியோகத்தர்களுக்கோ அறியத் தரலாம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆலோசனை வழங்கினார்

எச்சரிக்கை – அத்தனகலு ஓய பெருக்கெடுக்கும் அபாயம்

அத்தனகலு ஓய பெருக்கெடுத்துள்ள நிலையில் தற்போது அது வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மா ஓயவின் நீர் மட்டம் வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாகவும் இதனால் படல்கம மற்றும் கிரிஉள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை (26) நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + three =

*