;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.05.2018)

0


மழையுடனான கால நிலை தொடர்ந்தும் நீடிக்கும்…

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான கால நிலை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வட மாகாணத்தில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் வங்கியில் தீ விபத்து

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (27) அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொஹுவெல பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் வங்கியின் முன்னாள் உள்ள பகுதியுத் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்திற்கான காரணமே விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களே இதுவரையில் இனங்காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கொஹுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு 4 கோடி வழங்கியுள்ளது..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரையான இரண்டு வார காலப்பகுதி அனர்த்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்களை சீர் செய்வதற்காக பத்தாயிரம் ரூபா முற்பணமாக வழங்கப்படவுள்ளது.

இதற்காக நான்கு கோடி ரூபா நிதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 5 =

*