;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.05.2018)

0

கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை

கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த, இயற்கை அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்பில் இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையே மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு கதிர்காமத்தில் சொகுசு விடுதி?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான செய்தியை, “கோட்டாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த செய்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் குறித்த சொகுசு விடுதிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள நீர் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, தனது மனைவியின் பெயரில் உள்ள வீட்டைத் தவிர்த்து தனது பெயரில் உள்ள சொத்துக்கள் எவையேனும் இருந்தால் நிரூபித்துக்காட்டுங்களென சவால்விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*