;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.05.2018)

0

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தொடரும் வேலை நிறுத்தங்கள்..!!

தங்களுடைய கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு உரிய முடிவை அரசு வழங்காததினாலும் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குறித்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் வருடாந்த சம்பள உயர்வை மே மாத சம்பளத்துடன் சேர்க்காததன் காரணமாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்தக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று இரத்மலானையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திலங்கவுக்கு எதிராக நிஷாந்தவினால் மனு..!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்க மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் செயலாளர் மற்றும் நடக்கவிருக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளரான நிஷாந்த ரணதுங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவிற்கு பிரதிவாதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தாப, அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் பரிந்துரைக் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால உட்பட 27 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த மனுவில் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திலங்க சுமதிபால குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குறித்த மனுவை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்..!!

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

நாளை (29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தில் 12,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌ்ளத்தினால் ​எலிக் காய்ச்சல் ​நோய் பரவும் அபாயம்..!!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தால், எலி காய்ச்சல் நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ள நீரில் நடக்கும்போது பாதணிகளை அணிந்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ள சுகாதார பரிசோதகர்களின் செயலாளர், மகேந்திர பாலசூரிய வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 4 =

*