;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (29.05.2018)

0

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு அச்சுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பகுதியல் இடம்பெற்ற நிகழச்சியொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரயில்​​வே பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் சேவை பிரிவின் சில தரங்களில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கக் கோரி, இன்று (29) மாலை 4 மணிக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிநுட்ப சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடுமென, குறித்த சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்தார்.

மின்சாரம் துண்டிப்பு

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் தம்புள்ளை, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலே தற்காலிகமாக மேற்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 8 =

*