;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (29.05.2018)

0

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் தடை

பலத்த காற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை, பதுள்ள ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மின்சார தடையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சாய்வான பகுதிகளுக்கு மணிக்கு 50 – 60 என்ற வேகத்தில் காற்று வீசலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மலையக மக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தின் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மலையகத்தில் மேற்கு சரிவுகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் இதனால் அப் பகுதியிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, குறித்த காற்று தொடர்ந்து இரு தினங்களுக்கு வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

மினி சூறாவளியினால் ஆறு குடியிருப்புகள் சேதம்

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையால் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 6 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்டத்தில் லயன் குடியிருப்பின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றின் கூரைப்பகுதி காற்றினால் அள்ளுண்டு சென்றதையடுத்து மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் இரண்டு குடியிருப்புகள் கடும் சேதமாகியுள்ளதுடன் ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை திருத்தியமைக்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*