;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.05.2018)

0

விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்

வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

மேலும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்து அனைத்து
பாடசாலைகளும் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிதெரிவித்துள்ளார்

பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல பங்காளி கட்சிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று (30) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை பலப்படுத்தும் நோக்கிலும், எதிர்கால தேர்தல்களை பலமாக முகங்கொடுக்கும் வகையிலுமே இந்தச் சந்திப்பு அமையவுள்ளதென, அறியமுடிகின்றது.

அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம்

சம்பள உயர்வு உள்ளிட்ட மூன்று விதமானக் கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் 48 மணிநேர அடையாள ​வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக, ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப சேவை தொழிற்சங்கக் குழுத் தலைவர் சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக, ரயில்வே ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விடுமுறையின் போது விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை

கல்வி பொதுதராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை, பாடசாலை விடுமுறைகளின் போது மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

நேற்று (28) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்படும் வீணான காலதாமதங்களைக் கருதியே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ​அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 3 =

*