;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (30.05.2018)

0

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் முக்கிய சகா கைது

பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஹபுகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வக்வெல்லகமகே பிரதீப் தரங்க என்பவர் மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளராக அறியப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் 23 மற்றும் 33 வயதுடைய நியாகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேசங்களில் நேற்று (29) இரவு கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

5 கிராம் கேரளா கஞ்சாவுடன் 23 வயதுடைய துவரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவரையும், 330 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய கிளிகுஞ்சுமலை பகுதியை சேர்ந்த ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் போதைபொருட்களையும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிராகரிக்கப்பட்ட செல்லாக் காசுகளுக்கு ஏமாற வேண்டாம்

மக்கள் எதிர்பார்த்த ஆட்சி எதிரில் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறினார்.

கண்டி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்ததை தான் ஏற்றுக் கொள்வதாகவும், சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது அரசாங்கம் என்ற வகையில் சில தீர்மானங்கள் எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போது தவறுகளை உணர்ந்து எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் செயற்படுவதாகவும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறினார்.

எவ்வாறாயினும் மக்கள் நிராகரித்த செல்லாக்காசுகளுக்கு மீண்டுமொரு முறை ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அந்த கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டாம் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*