;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.05.2018)

0

நாமலுக்கு எதிரான வழக்கில் சாட்சியிடம் குறுக்கு விசாரணை

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

இதன்பேது அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகேயின் நெறிப்படுத்தலில் பொஸ்டன் கெப்பிடல் எனும் நிறுவனத்தின் தலைவரிடம் சாட்சி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், பிரதிவாதி சார்பான சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த குறுக்கு விசாரணையின் போது, முன்னதாக இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய 05 வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என்று சாட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து மேலதிக குறுக்கு விசாரணை நடவடிக்கை நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

ஜூன் 14 ஆம் திகதி வரை தேர்தலை நடத்த தடை உத்தரவு

நாளை (31) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலை ஜூன் 14 ஆம் திகதி வரை நடத்தாதிருக்க தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19 ஆம் திகதி நடைபெறவிருந்த போதும் அது பிற்போடப்பட்டது.

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவை தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (30) காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.

பிரதமருடனான இந்த சந்திப்பில் மேக் தொன்பரி, கேரோல் சீ போட்டர், விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் அக்குல் கேஷாப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளி முதல் பணிப்பகிஷ்கரிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையால், போக்குவரத்து கட்டணத்தை 12.5 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால், தாங்கள் நான்கு வகையான பிரச்சினைகளுக்கு முகம்​கொடுப்பதாகவும், அந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்” என்று செயலாளர் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*