;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (31.05.2018)

0

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகம் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனையிடப்பட்டுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் (31) தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 14ஆம் திகதி வரை தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டது

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவுக்கு அமைய விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*