;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (31.05.2018)

0

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது

2019ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று வௌியிடப்பட்டுள்ளன.

தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அரசாங்கத்துக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அரசாங்கத்தில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் 153 பேரை அவர்களின் உத்தியோகபூர்வ பணியில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை ஊடாக இந்த நட்டம் ஏற்பட்டிருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்கு இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டதுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.

பின்னர் வழக்கை ஆகஸ்ட் 28 ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2010ல் இருந்து 2014ம் ஆண்டு காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதால் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் ராஜ் பெர்னாண்டோ மற்றும் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் மொஹிதீன் சாகிர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

சிலாபம் – கொழும்பு வீதியில் வாய்க்கால் பிரதேசத்தில் நபர் ஒருவரை மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 02.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உயிரிழந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும் வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய ஒருவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது லுனுவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்வதற்காக வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*