;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.06.2018)

0

இம்முறை O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் 40 சதவீதமான விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் சில விண்ணப்பங்கள் குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை விரைவாக அனுப்பி வைப்பதற்கு அதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிக விலையுடைய மருந்துகளின் விலை ஜூலை முதல் குறைக்கப்படும்

று நோய் போன்ற அதிக விலையுடைய மருந்து வகைகள் பலவற்றின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

முதல் கட்டமாக அத்தியவசியமான 48 வகை மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

மருந்து விலைகள் குறைக்கப்பட்ட பின்னர் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்கு சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

சுகாதார சேவையில் இருந்து வெட் வரி நீக்கப்பட்டதன் பின்னர் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் வைத்தியசாலைகளின் கட்டணங்களையும் ஒழுங்கமைக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

மருந்து மாபியாவை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

புற்று நோய் மருந்தில் காணப்பட்ட மாபியாவை ஒழித்துள்ளதாகவும், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகின்ற புற்றுநோய் ஊசி மருந்து மூலம் நோயாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்

பாதுக்க, பொபே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்று சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதுதவிர வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடற்றொழிலின் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − six =

*