;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (21.06.2018)

0

எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

திர்வரும் சனிக்கிழமை (23) நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ள உள்ள காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையும் அந்த 16 உறுப்பினர்கள்

அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் குழு பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் தமக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இரு தரப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு கிடைக்க கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படி தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைவாக அந்த வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே என்றும் டிலான் பெரேரா கூறினார்.

தபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி ரே ரென், துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டிருந்தது.

பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்

“திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால் திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள். திருடர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிராக முறையாக வழக்கு தொடுத்து சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஊழல் மோசடிகளை விசாரிக்கும் நடைமுறையை பொதுவான நீதிக் கட்டமைப்பில் செய்ய முடியாது. இதற்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. முதல் நீதிமன்றம் ஜூலை இரண்டாம் வாரம் இயங்கத் தொடங்கும்” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*