;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (30.06.2018)

0

கூடிய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய திட்டம்

பெரும்போக நெல் அறுவடையின் போது, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும், சம்பா ஒரு கிலோகிராம் 42 ரூபாய்க்கும், கொள்வனவு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதற்கான அமைச்சரவைக்கு குழுவின் அனுதிக்கான பத்திரத்தை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) நடைபெறும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போகத்தின் போது, மெட்ரிக் டொன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் கொள்முதல் செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை திட்டமிட்டுள்ளது.

அதற்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி மில்லியன் 4,800 ரூபாயாகும். தயாரித்து வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட பத்திரத்துக்கான அங்கிகாரம் அமைச்சரவைக் குழுவால் எதிர்வரும் வாரம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உணவு பொதி, தேநீர் விலை குறையும்?

சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, உணவு பொதி மற்றும் ஒரு கோப்பை தேநீர் ஆகியவற்றின் விலையை குறைப்பதற்கும், அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று (30) மாலை சந்தித்து கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய உணவு வகைகளின் விலைகளை குறைப்பதற்கு கவனம் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் காட்டுப் பாதை 4ஆம் திகதி திறக்கப்படும்

கதிர்காம ஆடிவேல் விழாவுக்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை, எதிர்வரும் 4ஆம் திகதி திறக்கப்பட்டு, மீண்டும் ஜூலை 24ஆம் திகதி மூடப்படவுள்ளதாக,ஆலய வண்ணக்கர் ஜெ.டி.எம். சூது நிலமே தெரிவித்தார்

கதிர்காமம் புனித பாதயாத்திரையின் வனப்பகுதியின் ஆரம்ப இடமான உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளன.

செல்வச்சந்நிதி முதல் பாணம வரையான 510 கிலோமீற்றர் தூர பயணம் நகரங்கள் மற்றும் கிராமங்களை ஒட்டியதாகவுள்ளது. மீதமுள்ள 90 கிலோமீ ற்றர் தூரம் மிக அடர்ந்த வனப்பகுதியாகும் . பாணம முதல் கதிர்காமம் வரையான வனப்பகுதியில் உகந்தை, குமண, யால, பறவைதீவு, கட்டகாமம், வீரச்சோலை, கதிர்காமம் ஆகியன மிக அடர்ந்த வனப் பகுதியாகும்.

இதில் வனப்பகுதியின் ஆரம்ப இடமான உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மட்டுமே சுமார் ஒரு வாரகாலம் யாத்திரிகர்கள் தங்கியிருப்பர்.

இவர்களுக்கு தேவையான உணவு குடிநீர். மலசலகூட வசதிகள், மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் போன்ற வசதிகளை மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் பூரத்தி செய்யப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு பதவியுயர்வு

இலங்கை இராணுவத்திலுள்ள சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு, நேற்று (29) மாலை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இலங்கை இராணுவத்திலுள்ள பிரிகேடியர்களாக சிரேஷ்ட தரத்திலுள்ள ஐவருக்கு, மேஜர் ஜெனரல் பதவியுயர்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கேப்டன் தரத்திலுள்ள 34 பேருக்கு, மேஜர் தரத்தில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதிவியுயர்வு வழங்கப்பட்ட அனைவரும், யுத்த காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*