;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.07.2018)

0

நாளை நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை

ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள், தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.

ரயில்வே தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை நள்ளிரவு முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘அரசாங்கத்தை கனவில் மாத்திரமே தோற்கடிக்க முடியும்’

2020ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதென்பது கனவில் மாத்திரமே நடைபெறுமென, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போலி நாணயத்தாள்களுடன் பிக்கு கைது

சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து நேற்று (20) மாலை, 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் பிக்கு ஒருவர், சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றும் பிக்குவே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு, சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடைகளில், ஆயிரம் ரூபாய் நாணயத் தாளை கொடுத்து, பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது, சிலாபம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பிக்குவை கைதுசெய்தனர்.

குப்பை வாளிக்குள் இருந்து தங்கம் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குப்பை வாளியில் இருந்து, நேற்று (20) இரவு 11 மணியளவில், சுமார் 19 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதியை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவரால், சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்தே. இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது,116 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக, சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காலியில் ஆர்ப்பாட்டம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இன்று (21) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − eight =

*