;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.07.2018)

0

மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் GMOA

மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதி முடிவு செய்வதற்காக இன்று (22) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக டொக்டர். பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 10 கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்கிய ஆலோசனை திட்ம் ஒன்றை முன்வைத்தும் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவினால் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சரியான தலைமைத்துவம் இல்லை

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணம் சரியான தலைமைத்துவம் இல்லாததே என ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது சரியான மற்றும் உறுதியான தலைமைத்துவம் ஒன்று இருந்ததே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான தலைமைத்துவம் இல்லை எனவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு அதிகமான காலம் கடந்து விட்ட போதிலும் இதுவரையில் நாட்டிற்கு எவ்வித நலனும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருக்கிறது

நாட்டை ஆட்சி செய்யும் உரிமை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மட்டுமே இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிக முறை நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் பிரபல பொறுப்புக்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களே இருந்தார்கள் எனவும் அதன் பிரதிபலன் மக்களுக்கு சேவை செய்ததே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் ஒருவர் பலி

இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கன்டேனர் வாகனம் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து பலத்த காயமடைந்த லொறி ஓட்டுனரை வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கபரகலவத்த, எலமுல்ல பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் கன்டேனர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதம் தடம் புரண்டதில் புகையிரத சேவையில் தாமதம்

ஹட்டன் – ரொசெல்ல பகுதிகளுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மலையகத்திற்கான அனைத்து புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 4 =

*