;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (31.07.2018)

0

வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக ஆகஸ்ட் 10 முதல் மேன்முறையீடு செய்யலாம்

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் தெரிவிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை அதற்கான அவகாசம் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம் மொஹமட் கூறினார்.

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு ஒக்டோபர் மாதம் 05ம் திகதி உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எம்.எம் மொஹமட் கூறினார்.

இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும்

அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல முனைவதாக குளியாப்பிட்டி கிரிந்தவ மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து வருடமே. அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே பாடசாலைகளில் நீண்டகாலம் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது கட்டாயமானது.

இது அதிபர்களுக்கும் பொருந்தும். ஒரு அதிபர் சிறந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது சேவை மற்றுமொரு பாடசாலைக்குத் தேவைப்படலாம். இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன்கருதி நல்ல வேலைகளை செய்யும் போது, அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது நல்லதல்ல. மாறாக அரசாங்கம் தனது காரியத்தை செவ்வனே நிறைவேற்ற இடமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அரச தகவல் திணைக்களம்

அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நட திட்டம்

அதிவேக நெடுஞ்சாலைக்கு இருபுறங்களிலும் மரங்களை நட்டு, வனப்பகுதியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பொழுது, அங்கிருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டமையை தொடர்ந்து, வீதியின் இருபுறங்களிலும் மீளவும் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டமானது இராணுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பொதுமக்களின் 5,160 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது’

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 5,160 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 4,811 ஏக்கர் காணியும், கிழக்கு மாகாணத்தில் 349 ஏக்கர் காணியும் கடந்த வருடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 4,981 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 9 =

*