;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.08.2018)

0

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று ஆரம்பமாகின்றது.

அந்தப் பாடசாலைகள் மீண்டும் மூன்றாவது தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதுடன், இதற்காக 03 இட்சத்து 55,326 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அந்தப் பரீட்சை நாடு பூராகவுமுள்ள 3050 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற உள்ளது.

ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

சட்டத்துக்கு மாறான முறையில் சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

தனிப்பட்ட விஜயமாக ஜப்பானுக்கு செல்ல வேண்டி உள்ளதால் அனுமதி வழங்குமாறு ரோஹித அபேகுணவர்தனவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி வரை அவருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டதுடன், நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் ஏழு பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

வலஸ்முல்ல, குட்டியாகல, பதுளை, மொரட்டுவ, கடவத்த, கம்பஹா மற்றும் வெலிகட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வலஸ்முல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கெப் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய நபரும், குட்டியாகல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பதுளை – மஹியங்கன பகுதியில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதி உயிரிழந்துள்ளதுடன், வெலிக்கடை பகுதியிலும் மோட்டார் சைக்கிளுடன் மோதி 56 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவ கோரலவெவ பகுதியில் இடம்பெற்ற லொரி விபத்தில் ஒருவரும், கடவத்த பகுதியில் துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சீதுவ – உடுகம்பொல வீதியில் கெஹெல்பத்தர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் கடும் காற்று: 217 வீடுகள் சேதம்

அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளனவென, மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க தெரிவித்துள்ளார்.

நககம்புற பகுதியில், 150 வீடுகளும், திஸ்ஸபுற பகுதியில் 22 வீடுகளும், கரங்காவ பகுதியில் 28 வீடுகளும், மிஹிதுபற பகுதியில் 11 வீடுகளும் , சத்தாதிஸ்ஸபுற பகுதியில் 3 வீடுகளும், ஜயவர்தனபுற பகுதியில் 2 வீடுகளுக்கும் இவ்வாறு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சி மட்டம் உயரும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகமானது, இவ்வருட இறுதிக்குள் 4 சதவீத மட்டத்துக்கு வரும் என, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஐந்தாவது நாணய கொள்கையை இன்று (03), வெளியிட்டதன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வருடத்தின் முதற் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகமானது, 3.4 சதவீதத்தை பதிவு செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர், வருட இறுதியில் 4 சதவீத வளர்ச்சி மட்டத்தை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − one =

*