;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (23.08.2018)

0

இன்டர்போல் பொலிஸார் ஊடாக அர்ஜுன மஹேந்திரன் கோரிக்கை

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தனது வழக்கு தொடர்பான பிடியாணையின் பிரதியையும், சாட்சிகளின் பிரதியையும் கோரியுள்ளார்.

இன்டர்போல் பொலிஸார் ஊடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையில் சில சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டு எதிர்க்கட்சி தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் மாகாண சபையை வெற்றி கொள்ளம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்

செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் ஆர்ப்பாட்டத்திற்காக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியளித்ததாகவும் அது சிறிய கட்சி ஒன்றின் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்

ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புகையிரத ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்

கடந்த தினங்களில் புகையிரத வேலைநிறுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புகையிரத போக்குவரத்திற்காக சிறிய அளவிலேனும் ஒத்துழைப்பு வழங்கிய புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போதும் எவ்வித அறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வேலைநிறுத்தத்திற்கான அனைத்து உரிமையும் தொழிற்சங்கத்திற்கு இருப்பதுடன் மக்களின் நலன் கருதி அவர்களுக்காக அனைவரும் முன்னின்று கடமையாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 2 =

*