11 January 2017 0 Comments Report

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3

03
கண்டி வைத்தியசாலையின் வார்ட்டுக்கு பூட்டு-

கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை உடனடியாக அமுலாகும் விதமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் 03 நோயாளர்கள் உயிரிழந்தமையின் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் குறித்த அறியில் வேகமாக பரவும் வைரஸ் காரணமாக இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க அத தெரணவிடம் கூறினார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் மீண்டும் கிடைத்தது-

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்காள ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.

அதன்படி இலங்கையின் ஆடை வகைகள், மீன்கள் உள்ளிட்ட பல பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதிய செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவருக்கான காலம் வந்துவிட்டது-

புதிய தலைவர் உருவாகி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலம் வந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி – புபுது-

வெளிநாட்டு முதலீடுகள் எனக்கூறி அரசாங்கம், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அண்மை காலங்களில் மேற்கொண்ட முதலீட்டு திட்டங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையற்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment