21 April 2017 0 Comments Report

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1


குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கடன் இரத்து

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட தஹம்புர மற்றும் பன்சல வத்த ஆகிய பகுதிகளில் வசிப்போரின் வீட்டுக்கடன் இரத்துச் செய்யப்படுமென அறிவிக்ப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு

கொலன்னாவை, மீதொட்டமுல்லயிலிருந்து, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, மாதாந்தக் கொடுப்பனவாக 50,000 ரூபாயை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

மஹிந்த செய்த பாவத்தின் கடனை செலுத்தும் நல்லாட்சி

ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை கேட்டுகொண்டு நாம் விலகிச் சென்றுவிட்டால் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு துறைமுகத்தினை விற்பனை செய்திருப்பார்கள்.

அவ்வாறின்றி நாட்டின் வழங்களை பாதுகாப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக மஹிந்த செய்த பாவத்தின் கடனையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது. என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

*