;
Athirady Tamil News

மனோ கிரிதரனின் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!

0

அன்னை மரியின்
கடுகருவில் கன்னி மகனாய்
கருத்தறித்த பாலகனே!!!

மேகங்கள் அரசாட்சியில்
மின்னல்களின் ஆளுமையாய்,

மார்கழி திங்களில்
மங்காத சந்திரனாய்,

தேவ மகனின் மாணிக்கமாய்
மண்ணுலக மக்களின் மன்னராய்,

மன்னாதி மன்னன்
மனிதனாய் பிறந்த நாள்.

வைரங்கள் கோடி சேர்த்து
வைக்கோலின் மீது அமர்த்தி
புன்னகையென்னும் பூவிதழ் சேகரித்து
துன்பம் என்னும் கர்வம் தொலைத்து
இன்பம் என்னும் மணிமூடி தந்த
மகராசன் பிறந்த நாள்.

கோடி ஆண்டுகள் கூடி வாழ்ந்தாலும்
கிடைக்காத இன்பமெல்லாம்
மார்கழி திங்களில் கிடைத்தது
பனிதுளியாய் பாரினில்
பரமன் பிறந்த நாளில்……………….

மெய்ப்பர்கள் எல்லம் புல்வெளி தேட
மாந்தர்கல் எல்லாம் விண்வெளி தேட
விண்ணையும் மண்ணையும் ஆளும்
விடிவெள்ளி வானில் உதித்த நாள்

இதுவரை பட்ட பாடுகளும்
அனுபவித்த துன்பங்களும்
இந்த ஆண்டோடு முடிந்து
புதிய ஆண்டில் நிம்மதியான வாழ்க்கையும்
வளமான வாழ்வும் வாழ உங்களை வாழ்த்துகிறேன்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும்
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
-வாழ்த்துகளுடன் உங்கள் மனோ கிரிதரன்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*