;
Athirady Tamil News

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; சிறுவன் உட்பட 8 பேர் பலி

0

தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிராம் மருத்துவமனைக்கு முன்பாக இருந்த ஒரு கட்டிடம் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது

வோஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், இவ்வாறான தொடர் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைக்கான சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.