உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

ரம்புக்கனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்ட சமிந்த லக்ஷானின் இறுதி கிரியைகள் நேற்று (23) இடம்பெற்றன. இந்நிலையில், ​காலி முகத்திடலில், “கோட்டா கோ ஹோம்“ எனுமிடத்திடலும் ஜனாதிபதி வளாகத்திலும் வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அந்த கொடிகளில், சிவப்பு நிறத்திலான சாயம் ஊற்றப்பட்டிருந்தது. இதேவேளை, “உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை” எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலகம் முன்பாக மட்டுமன்றி, அலரி மாளிகையின் முன்பாகவும் சிவப்பு நிறத்திலான சாயம் தெளிக்கப்பட்டிருந்த வெள்ளைக்கொடி ​ஊன்றப்பட்டுள்ளது. … Continue reading உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!