ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்குள் சற்றுமுன்னர் பொதுமக்கள் நுழைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையின் வாயிற் கதவை உடைத்துக்கொண்டு இவ்வாறு மக்கள் மாளிகைக்கு நுழைந்துள்ளனர். இதன்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பின்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில் பௌத்த பிக்குகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் பதற்றம் பலர் காயம் !! தலைக்கவசத்தை கழற்றி … Continue reading ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)