;
Athirady Tamil News

பெற்றோர் செய்யும் 7 தவறுகள்…. !! (கட்டுரை)

0

குழந்தைகளின் மனதில் இச்சை உணர்வு அதிகரிக்க திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று தான் சமூகத்தில் பலர் அறைகூவலிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சமூகமும், பெற்றோரும் தான் முக்கால்வாசி காரணம். இந்தியாவில் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே சற்று வித்தியாசமானது. முதலில் விளையாட்டாக இருப்பார்கள், போக, போக படு ஸ்ட்ரிக்ட்டாக நடந்துக் கொள்வார்கள்.

படிப்பில் இருந்து, நற்குணங்கள், அடக்கம், குழந்தைகளின் சமூக செயல்பாடு என அனைத்திற்கும் இது பொருந்தும். உடை உடுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த தவறான வளர்ப்பு முறை. மூன்று வயதில் தொப்புள், தொடை தெரிய உடை உடுத்துவதை அழகு என வளர்த்துவிட்டு, பதினெட்டு வயதில் அதை கவர்ச்சி என வேறு பெயரில் கூறுவது பெற்றோரின் தவறு.

குழந்தைகளின் மனதில் இச்சை எண்ணத்தை தூண்டும் சில செயல்களில் பெற்றோர் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்…

செயல் # 1
திடீர் தடை! சிறு வயதில் இருந்து ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை திடீரென பருவமடைந்தவுடன், அவனுடன் விளையாட வேண்டாம், பழக வேண்டாம் எனும் போது, அவர்கள் மனதில் எழும், ஏன் என்ற கேள்வி பலருள் இந்த உணர்ச்சிகள் தூண்ட காரணியாக இருக்கிறது.

செயல் # 2
சிறு வயதில் இருந்து குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் உடைகள், என உடலின் மீதான கூச்சம் அறுப்படும் படியாக வளர்ப்பது. தீண்டுதல் மற்றும் உணர்சிகள் பற்றிய வேற்று கருத்து நிலவ காரணியாக அமைகிறது.

செயல் # 3
கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் அன்பின் வெளிப்பாடு என்பதை உணர்த்தி வளர்க்க வேண்டும். குழந்தை பருவத்தில் சகஜமாக இருந்ததை, வளர, வளர தவறு என கூறுவது, அவர்களை அதை மீண்டும் அதிகமாக செய்ய தான் தூண்டும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

செயல் # 4
முக்கியமாக பெண் குழந்தைகளிடம் ஆண்கள் பழகுவதே தவறான நோக்கத்திற்காக என்பதை பாதுகாப்பு கருதி கூறுகிறோம் என பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், சில சமயங்களில் இதுவே, அவர்களை அந்த செயலில் ஈடுபட தூண்டுகிறது.

செயல் # 5
குழந்தைகள் முன்பு, பெண்களை அவமதித்து பேசுதல், கொச்சையாக உவமைப்படுத்துதல் போன்றவை பெண்கள் என்றாலே அதற்காக தான் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் எழ செய்கிறது. எனவே, இதை பெற்றோர், பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்.

செயல் # 6
பெண் என்றாலே இப்படி தான் இருக்க வேண்டும், இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது, தலை நிமிர்த்தி நடக்கக் கூடாது என பல தடைகள், நிபந்தனைகள் விதிக்கும் போது அந்த பெண் குழந்தைக்கு அந்த தடைகளை மீறி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகரிக்கும். எனவே, அவர்களை இயல்பான வாழ்க்கையை வாழவிடுங்கள்!

செயல் # 7
குழந்தைகள் பதின் வயதுக்கு வளர்ந்த பிறகு பெற்றோர்கள் குழந்தைகள் முன்னர் நெருக்கமாக பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் சாதாரணமாக எண்ணி செய்யும் செயல்கள் கூட குழந்தைகளின் மனதை கெடுக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.