;
Athirady Tamil News

ஞானம் பாலர் பாடசாலை திறனாய்வு போட்டி, பரிசளிப்பு விழாவுக்கு நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)

0

கனடா இந்திரன் பிறந்தநாளில் ஞானம் பாலர் பாடசாலை திறனாய்வு போட்டி பரிசளிப்பு விழாவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது..
#################################

இந்திரன் என அழைக்கப்படும் புங்குடுதீவு அமரர் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் பரம்பரை வழித்தோன்றல்களில் ஒருவரான கனடா நாட்டில் வசிக்கும் ஆபிரகாம்லிங்கன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் திறனாய்வுப் போட்டிப் பரிசளிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய (02.03.2021) நாளில் நடைபெற்றது..

முன்பள்ளி ஆசிரியை இராஜேந்திரன் கோகிலராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி, அருள்வேல்நாயகி அவர்களும், கற்குழி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இந்திரசித்தன் அஜீத் அவர்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஆலோசகர்களில் ஒருவரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் அவர்களும் விசேட அதீதிகளாக கலந்து மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்து சிறப்பித்தார்கள்.

அத்தோடு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக இன்றைய பிறந்தநாளைக் கொண்டாடும் கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் ஆபிரகாம்லிங்கம் அவர்கள் தனது நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

இவருக்கு ஞானம் பாலர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனமுவந்து நிதி வழங்கிய நல்லுள்ளத்தை வாழ்த்துகிறது.

ஏற்கனவே மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக கொரோனா தொற்று நோய் தடுப்புக்கான கைகழுவும் பாத்திரத்தின் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் நீர் வசதியும், அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்கள் பொதியினையும், அண்மையில் மாணவர்களின் புத்தக பை மற்றும் தண்ணீர்ப் போத்தல்களை கொளுவி வைக்கும் வசதி கொண்ட இரும்பிலான றாக்கையினையும் வழங்கியுள்ளார்கள் என்பது இங்கு விசேடமாக குறிப்பிடலாம்.

அதனைத் தொடர்ந்து இன்றைய நாளிலும் கற்குழி ஞானம் பாலர்பாடசாலை சமுகம் கேட்டுக் கொண்டதற்கினங்க மாணவர்களுக்கான திறனாய்வு பரிசளிப்பு நிகழ்வுக்கும் நிதிப்பங்களிப்பினை வழங்கியது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

02.03.2021

You might also like

Leave A Reply

Your email address will not be published.