;
Athirady Tamil News

சுவிஸ் பாபுவினால், “மைலதன் துர்ஷிகா” திருமண நாளில் உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் பாபுவினால், “மைலதன் துர்ஷிகா” திருமண நாளில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
#############################

தாயகத்தில் நடைபெற்ற செல்வன் மைலதன் செல்வி துர்ஷிகா திருமண தொடக்க நாளில் வறிய நிலையில் வாழும் பல குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்றையதினம் திருமணம பந்தத்தில் இணைந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி மகிழும் மணமகள் துர்ஷிகாவின் சிறிய தந்தையும், புளொட் சுவிஸ் கிளைத் தோழருமான பாபு என அழைக்கப்படும் சுவிஸ்வாழ் உறவான பாபு ஹேமா தம்பதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில், வவுனியா கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வருகை தந்திருந்த கிராம மக்களுக்கு திருமண விசேட விருந்துபசாரம் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டதுடன் கொரோனா தொற்றுநோய் நாட்டுச் சூழலால் நாளாந்த வருமானத்தை இழந்து அன்றாட உணவுக்கே அல்லல்படும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தொலைதூரக் கிராமமான சிதம்பரபுரம், கற்குளம் 1, கற்குளம் 3, கற்குளம் 4 படிவங்களில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள், வயோதிப நிலையில் பராமறிப்பின்றி வாழும் குடும்பங்கள், கணவரை அல்லது தந்தையை இழந்த குடும்பங்கள், நோயின் தாக்கத்தினால் தொழில் செய்ய இல்லாத நிலையில் வாழும் குடும்பங்கள், நாளாந்த கூலித் தொழிலாளர் குடும்பங்கள் என பல்வேறு நிலையில் வாழும் குடும்பங்களுக்கு புதுமணத் தம்பதிகளான மைலதன் துர்ஷிகா தம்பதிகளின் திருமண நாள் நினைவாக சுவிசில் வசிக்கும் மணமகளின் சிறிய தந்தையான திரு. திருமதி. பாபு ஹேமா தம்பதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

மேற்படி புளொட் சுவிஸ் கிளைத் தோழரான பாபு அவர்கள் தனது குடும்பத்தின் நிகழ்வுகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டங்களூடாக உதவி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வெறுமனையே திருமண விருந்துபசாரத்தோடு நின்றுவிடாமல், நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்று நோய் காரணமாக பயணத்தடை, தொழில் முடக்கம், நாளாந்த வருமானம் இழப்பு போன்ற காரணங்களால் அன்றாட உழைப்பை இழந்து பட்டினி நிலையை எதிர்நோக்கும் குடும்பங்களை இனங்கண்டு கிராமிய பொது அமைப்புக்களின் சிபாரிசுக்கமைய பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேர்வு செய்து உலருணவுப் பொதிகளை வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தாயக மக்களுக்கு வலிந்து உதவி செய்யும் தொழமை உறவுகளின் ஆதரவுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடர்ச்சியாக மக்களுக்கு தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் தனது பெறாமகளின் திருமணத்தை முன்னிட்டு தாயக உறவுகளின் வயிற்றை மட்டுமல்ல அவர்தம் குடும்பங்களுக்கு உணவளித்த சுவிஸ்வாழ் உறவான திரு திருமதி பாபு ஹேமா தம்பதிகளோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் தாயக உறவுகளின் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதோடு புதுமணத் தம்பதிகள் எல்லா வளமும், நலமும் பெற்று பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
07.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.