;
Athirady Tamil News

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த முருகனடியாருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா வெளிக்குளம் சமுர்த்தி சங்க கட்டிடத்தில் பாடசாலை மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர். இவர் “மாணிக்கதாசன் நற்பணிமன்ற” நிர்வாகசபை உறுப்பினர் என்பதினால், மன்றத்தின் நிர்வாகத்தின் நிதிப் பங்களிப்பில், பிறந்தநாள் கேக் வெட்டி, மேலதிக கேக்கும் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது. முதலில் குறிப்பிட்ட மாணவர்களே கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மும்மடங்கு மாணவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

மாலைநேர கல்வி செயற்பாட்டில் பங்கபற்றிய மாணவர்களும் அவர்களை கூட்டிச் செல்ல வந்த பெற்றோர்களும் சுவிஸ் வாழ் உறவான ராஜூ அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டதிலும் கலந்து கொண்டது சிறப்பானதாகும்.

இந்நிகழ்வில் கிராமசேவகர் திருமதி சுபாஸ் பவித்திரா அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.சுதர்மினி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா அமைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன்..நிர்வாகசபை உறுப்பினர் திருமதி பவளராணி மற்றும் சமுர்த்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களால் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கவண்டனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ச்சியா முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு மதிய விசேட உணவினை வழங்கிய திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. (இதுகுறித்த செய்தி படங்கள் வீடியோக்களுடன் தொடரும்)

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.01.2022

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.