;
Athirady Tamil News

மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவை சேர்ந்த அமரர் இராசம்மா முத்தையா அவர்களின் முப்பத்தியேழாவது நினைவாண்டை முன்னிட்டு அன்னாரின் மகனான அமரர்.முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில், மடடக்களப்பு கொக்கட்டிச்சோலை எனுமிடத்தில் அமைந்துள்ள சக்தி மகளிர்” இல்ல சிறுமியர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

முதலில் அமரத்துவமடைந்த அமரர் இராசம்மா முத்தையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய மேற்படி “சக்தி மகளிர்” இல்ல சிறுமிகள் சார்பில் தேவாரம் இசைத்து மனமுருகப் பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரமுகர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து “சக்தி மகளிர்” இல்ல சிறுமிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்குமான விசேட மதியஉணவு வழங்கப்பட்ட்து.

மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்க்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மடடக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்திராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது. இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மடடக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களில் ஒருவருமான திரு.போன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

அமரத்துவமடைந்த அமரர் இராசம்மா முத்தையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய மேற்படி “சக்தி மகளிர்” இல்ல சிறுமிகள், மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “எல்லாம் வல்ல பரம்பொருளை” வேண்டிக் கொள்வதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய அமரர். முத்தையா குணராஜா குடும்பத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

29.01.2022

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்லத்தில்” அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.