;
Athirady Tamil News

இன்று இதுவரையில் 735 பேருக்கு தொற்று உறுதி !!

0

இன்று (22) மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் இன்று இதுவரையில் 735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 557,172 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,110 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுக்கு உள்ளான 14,158 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.