;
Athirady Tamil News

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!! (படங்கள்)

0

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா நகர கிராம அலுவலகத்தில் வைத்தியர் அரங்கன் தலமையில் இன்று (27.11) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றிருந்ததுடன் பலர் ஆர்வத்துடன் காலை நேரத்திலேயே பங்கேற்றிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.