;
Athirady Tamil News

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பில், உயரிய சபையே தீர்மானிக்கும் – மாநகர முதல்வர்!! (படங்கள்)

0

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைத்தலும் நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற செயற்றிட்டத்துக்கு அமைவாக, நாவலர் கலாசார மண்டப செயற்பாடு தொடர்பான சந்திப்பொன்று யாழ். மாநகர சபையில் இன்று இடம்பெற்றது.

இந்து சமய, கலாசார அலுவவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலர் கலாசார மண்டபத்தில் நாவலர் பணிகளை யாழ்.மாநகர சபையோடு இணைந்து செயற்படுத்தும் வகையில் சுமூகமான முறையிலே இடம்பெற்ற இச் சந்திப்பில், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா, பிரதமரின் இணைப்புச் செயலாளர் திரு,கீதநாத் காசிலிங்கம், யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன். யாழ்.இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.தயானந்தராஜா, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர், விடைக்கொடிச் செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் .அ.உமாமகேஸ்வரனால் நாவலர் கலாசார மண்டபம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டது.

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாகச சுமுகமான முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் , இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு சேர்ந்து நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, சபையினரோடு கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கலந்துரையாடலில் யாழ். மாநகர சபையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.