;
Athirady Tamil News

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்)

0

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்)

சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலை சார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள அரச வங்கி நிறுவனம் ஒன்று (Bern Kantonal Bank) அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற தமிழ்க்கலைத் தேர்வில் இசைத்துறையில் ஆற்றுகைத் தேர்வினை நிறைவு செய்த தமிழ் மாணவியும், வளர்ந்து வரும் இளம் இசை ஆசிரியருமான இசைக்கலைமணி சைந்தவி கேதீஸ்வரன் அவர்களுடைய இசைத்துறை சார்ந்த அட்டைப்படத்தினை தங்கள் வங்கியின் இலத்திரனியல் இயந்திரத்திலும் (ATM Cash Machine) விளம்பர செயற்பாடுகளிலும் பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.

செல்வி. சைந்தவி கேதீஸ்வரன் அவர்கள் சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த திரு.திருமதி. கேதீஸ்வரன் வளர்மதி ஆகியோரின் ஏகபுதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் இருந்தே தமிழ்மொழியினையும் இசைத்துறை சார்ந்த தமிழ்க்கலையினையும் முறையாகக் கற்றுவந்த செல்வி. சைந்தவி கேதீஸ்வரன் அவர்கள் பொருளியல் சார்ந்த உயர்கல்வியினையும் கற்று வருவதுடன் மேற்குறிப்பிட்டுள்ள வங்கியில் வாடிக்கையாளர் நிதியியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்கள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழர்களின் தமிழ்கலையினை அரச வங்கி நிறுவனம் ஒன்று அடையாளப்படுத்தக் கூடியவாறு தன்னை உயர்நிலைப்படுத்திக் கொண்ட செல்வி சைந்தவி கேதீஸ்வரன் அவர்களிற்கு “அதிரடி” இணையம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.

தாயகத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் பெற்றோர்களின் நீண்டகால கடினமான உழைப்புக்களிற்கு கிடைத்த அறுவடையாக, அவர்களின் பிள்ளைகள் பல துறை சார்ந்த உயர்கல்விகளுடன் தாய் மொழியினையும் தமிழ்க் கலைகளையும் கற்று துறைசார் உயர்பதவிகளிலும் பணியாற்றி வருவது பெருமையளிக்கின்றது.

(நன்றி.. அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்..)

You might also like

Leave A Reply

Your email address will not be published.