;
Athirady Tamil News

களனி கங்கை குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

0

நாட்டில் மிகவும் மாசுபட்ட கங்கையாக களனி கங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

களனி கங்கையை மாசடையச் செய்யும் 1,344 இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இதிலிருந்து களனி கங்கைக்கு கழிவுகள் எங்கிருந்து விடப்படுகின்றது மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம். ´சுரகிமு கங்கா´ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள 103 ஆறுகளையும் தூய்மையான நதிகளாக மாற்றி, தண்ணீரை பயன்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளோம். எமது 103 ஆறுகளில் 10,743 இடங்கள் நீரை மாசுபடுத்தும் இடங்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். குறிப்பாக களனி கங்கையில்தான் அதிகப்படியான மாசமடைந்த நீர் உள்ளது. களனி கங்கைக்கு 1,344 இடங்களில் இருந்து கழிவு நீர் விடுக்கப்படுகிறது. வீடுகளின் கழிவறைகள் நேரடியாக ஆற்றிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,´´ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.