;
Athirady Tamil News

’நத்தாருக்கு மதுபான அனுமதி இல்லை’ !!

0

கிறிஸ்மஸ் தினத்தை இலக்காகக் கொண்டு சாதாரண ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுக்கு மதுபானங்களை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

சுற்றுலா சபையினால் அங்கிகரிக்கப்பட்ட ஹோட்டல் அறைகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இவ்வருடம் மட்டுமன்றி இதற்கு முன்னரும் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்மஸ் தினத்தில் மதுபானங்களை விநியோகிப்பதற்கு அனுமதி கோரி சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.