;
Athirady Tamil News

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!!

0

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியபோது கொழும்பு இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணிபத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்பட பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றை பெற்றுதருவதாக ஒருவரிடம் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 இலட்சம் ரூபாவை இலஞ்சாமாக கொடுத்தபோது அங்கு இருந்த இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.​

இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.