;
Athirady Tamil News

சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா இறைபாதமடைந்தார்!!

0

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார் என்ற செய்தி எம்மை மிகவும் கவலைப்படுத்தியுள்ளது. அவர் சர்வோதய நிதி வங்கிப்பிரிவின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினராகவும், மார்ச் 12 இயக்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் ஒருவராகவும், இலங்கை சிவில் அமைப்புக்களின் சட்ட ஆலோசகராகவும், ரோயல் கல்லூரியின் மாணவராக காணப்பட்டார். இளமானி பட்டப்படிப்பினை B.Sc. in Agricultural Engineering பேராதனைப்பல்கழைக்கழகத்திலும் M. Sc. in Water Resources Engineering at KU Leuven, M. Sc. in Water Resources Engineering at Vrije Universiteit Brussel, Masters in Science in Resources Engineering at Universität Karlsruhe (TH), Government and NGO relations at Ulster University இனையும் மேற்கொண்டதுடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான கற்கைகளினையும் நிறைவுசெய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வோதயத்திற்கு ஒரு புதிய பாதையினை வடிவமைப்பதற்கு இவரது பங்களிப்பு உயரியதாக காணப்பட்டது. புதிய திட்டங்களை வழங்குவதில் மிகவும் உறுதியுடன் செயற்பட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள் URI செயற்பாடுகளுக்கு மாவட்ட நிலையம் மற்றும் சேவையாளர்களை தொடர்புபடுத்தி பல செயற்பாடுகளை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த உறுதினையாகவிருந்தார்.

சர்வோதய நிதி கம்பனியின்[SDF] ஸ்திரத்திற்கும், சர்வோதய சங்கங்களின் புத்துணர்ச்சி பெற வைப்பதற்கும் அவரினால் தேசிய அளவில் பாரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இவரது மறைவுச் செய்தி துயரடைய செய்துள்ளதுடன் சர்வோதய என்ற குடும்பத்திற்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது துயரினைப்பகிர்கின்றோம். இவரது இழப்பு என்பது சர்வோதயத்திற்கு மட்டுமல்லாது பூமிக்கு ஏற்பட்ட இழப்பாக வேதனையினை பகிர்கின்றோம்.

துஷ்யந்தன்.உ

You might also like

Leave A Reply

Your email address will not be published.