;
Athirady Tamil News

புதையலில் தோண்டப்பட்ட கறுப்பு தங்கத்துடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!! (வீடியோ, படங்கள்)

0

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவ தினமான வெள்ளிக்கிழமை(19) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113 கிராம் 180 மில்லி கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிசங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்ஸ்டபிள்களான சுபசிங்க (14235) புத்திக( 40557)அமரசேகர (67810) இந்துநில் (66833) ராஜபக்ச (24812)அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் திருக்கோவில் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.