;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று குறைவு- புதிதாக 2,756 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,797 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 12 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,393 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,593 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 16 மரணங்கள் உள்பட மேலும் 21 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,799 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.