;
Athirady Tamil News

“எங்கள் பிள்ளைகளை இழக்க விரும்பவில்லை” !!

0

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் கடந்த 2016ஆம் ஆண்டு மண்சரிவால் பாதிக்கப்பட்டு கல்விசெயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இந்நிலையில், தெஹியோவிட்ட தேசியப் பாடசாலையில் பெரும்பான்மை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் நிறைவு பெற்றதும் 1.30 மணிக்கு பிறகு தமிழ் மாணவர்களுக்காக மாலைநேர பாடசாலை இடம்பெற்றது. இது தற்காலிக தீர்வாகும்.

பின்பு காலநிலை சுமுகமான நிலையில் மீண்டும் அந்த மண் சரிவு அபாயமிக்க தெஹியோவிட்ட பாடசாலைக்கே மாணவர்கள் திருப்பி அனுபப்பட்டனர்.

பாடசாலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாத நிலையில், தெஹியோவிட்ட நகரில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் ஈரியகொல்ல பகுதியில் பாடசாலைக்கான புதிய காணி அரசியல் அழுத்தத்தில் மூலம் பெறப்பட்டு மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் குறித்த கட்டிடம் இன்னும் நிறைசெய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலை காணப்படுகின்றது.

2016க்கு பிறகு ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் மாணவர்கள் மிகவும் அச்சத்திலேயே கல்வி கற்று வந்தனர். எந்நேரத்திலும் பாடசாலை முழுமையாக மண்சரிவுக்கு உட்படலாம் என்ற நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து தெஹியோவிட்ட நகரில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் இன்று (26) ஈடுப்பட்டனர்.

தெஹியோவிட்ட பெற்றோல் நிரப்பு நிலைய அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. தெரணியகலை சந்தி வரை பதாதைகளை தாங்கிய வண்ணம் நிரந்தர தீர்வுக்கோரி உரத்த குரலில் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது மாணவர்களையும் ஆர்ப்பாட்டத்தில் இணைத்திருந்தனர்.

“மண் சரிவு அபாயமிக்க பாடசாலைக்கு அனுப்பி எங்கள் பிள்ளைகளை இழக்க விரும்பவில்லை”. “எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்”. ஆகவே உடனடி தீர்வாக புதிய காணியில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடத்தை முழுமைப்படுத்தி பாடசாலை நடவடிக்கைகளை அந்த கட்டடத்தில் முன்னெடுக்கவேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.