;
Athirady Tamil News

மன அழுத்தத்தைப் போக்கும் கறிவேப்பிலை !! (மருத்துவம்)

0

பெரும்பாலோனோர் உணவிலிருந்து ஒதுக்கும் ஒன்று தான் இந்த கறிவேப்பிலை. கறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகுவாக தமது உடநலன்களை இழக்க நேரிடும் என்பது உண்மையாகும். அதிசிறந்த மருத்துவ நலன்களை கொண்ட கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

கறிவேப்பிலையில் விட்டமின் ஏ, பி, பி2 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகையினால் தினசரி உணவோடு உட்கொள்வது சிறப்பாகும்.

சர்க்கரை நோயாளர்கள், தினசரி காலை, மாலை கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வர, உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்;. அத்துடன் இளநரையால் பாதிக்கப்பட்டோர், கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் இட்டு காய்ச்;சி, தினமும் தலைக்குத் தேய்த்து வர வெகு விரைவில் இளநரை மாறுவதனை அவதானிக்கலாம். மேலும் சிலர் தாம் உண்ணும் உணவின் சுவையை உணரமுடியாமல், அவதிப்படும் நிலையை காணமுடியும். இதற்கு தீர்வாக கறிவேப்பிலையுடன் சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, சூடான சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே சுவையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணலாம்.

வேலைப்பளு, அதிகமாக சிந்தனை செய்வது போன்ற சில காரணங்களினால் பலர் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவஸ்தைப்படுவதை காணமுடியும். இப்படியான மன அழுத்தப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வினை, கறிவேப்பிலையை உட்கொள்வதன் மூலமாகத் தீர்த்துகொள்ளலாம். அதாவது, கறிவேப்பிலையை நன்றாக நீரினால் அலசியன் பின்பு, அதனுடன் சிறிதளசு இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம் மற்றும் புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்து இவற்றுடன் எலுமிச்சை பழச்சாற்றையும் கலந்து மதிய உணவோடு சாப்பிட்டு வர, மன உளைச்சல், மன அழுத்தம், குழப்பமான மனநிலை என்பன நீங்கி ஞாபக சக்தி அதிகரிப்பதை உணரலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.