;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 96 பேருக்கு கொரோனா- உத்தரபிரதேசத்தில் ஒருவர் பலி!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 89 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 81 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 1,785 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 14 அதிகமாகும். தொற்று பாதிப்பால் கடந்த 5 நாட்களாக புதிதாக உயிரிழப்புகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,746 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.