;
Athirady Tamil News

நாகர்கோவிலில் முத்தாரம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது!!

0

நாகர்கோவில் சித்திரைத்திருமகாராஜபுரம் இந்து பாரார் சமுதாய வகை தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 7 மணிக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், துர்க்கா பூஜை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

வருகிற 22-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கடல் தீர்த்தம் எடுத்து வருதல், 23-ந் தேதி மாலை 5 மணிக்கு காலசாமிக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் ஊர் பவனி வருதல், 10 மணிக்கு வாணவேடிக்கை, 11.30 மணிக்கு வில்லிசை ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வில்லிசை, காலை 6.30 மணிக்கு மஞ்சள் மாரியம்மனுக்கு பூஜை, 9 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு கொடிமரத்து சுடலைமாடசாமிக்கு பொங்கல் நீராட்டு விழா போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகக்குழு மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.